கள்ளக்காதலியின் கிளுகிளு படங்களை வீதிவீதியாக ஒட்டிய பேராசிரியர்

கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த ஆபாச போட்டோக்களை ஊர் முழுக்க ஒட்டிய கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (29).

பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியர். அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஏஞ்சல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. ஏஞ்சலுடன் நெருக்கமாக இருந்தபோது செல்போனில் கார்த்தி படம் பிடித்து வைத்துள்ளார். சில நாட்கள் முன்பு கள்ளக்காதல் முறிந்தது.

கார்த்தியை சந்திப்பதை ஏஞ்சல் தவிர்த்தார். ஆத்திரமடைந்த கார்த்தி, தம்பி தங்கவேலுடன் சென்று, ‘நீ என்னிடம் பேசாவிட்டால், என்னுடன் நீ நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

ஏஞ்சல் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், ஏஞ்சலுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை கார்த்தியும் தங்கவேலும் கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுத்து, நேற்று முன்தினம் ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏஞ்சல், பங்களாபுதூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து கார்த்தி, தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர். ஆபாச படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆபாச, படங்களை பிரின்ட் எடுக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரின்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 comments:

Post a Comment

tamildesamchat

how to make gifs
 
tamildhesamchat,tamil,TamilChat,Tamil chat,best tamilchat,supper tamilchat,videochat,tamilchatroom, © 2008. Template by BloggerBuster.